Wednesday 16 May, 2012

கோபமே நீயாகிடும் வேளை...



தீயாகவோ, புயலாகவோ...
திருக்கைமீன் வாலாகவோ...
பூவாகவோ, புன்னகையாகவோ...
புத்தம்புது விஷமாகவோ...
உன் கோபம் 
எப்படி வருமென்று எனக்குத் தெரியாது!!

எப்போது வரும்?
எதற்கு வரும்?
எவ்வளவு வரும்?
உனக்கும் தெரியாது!!

கோபமே நீயாகிடும் சில வேளைகளில்...
வெண்ணைக்கட்டியாக அனலில் விழுந்து
உருகித் தொலைகிறேன் நான்.




5 comments:

Yaathoramani.blogspot.com said...

பாதிக்கப்படும்போது கூட பயன்படும்படியாகத்தான் இருப்பேன்
என்பதை நாசூக்காகச் சொல்லிப் போனவிதம் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

செய்தாலி said...

ம்ம்ம்... அருமை
ஆரம்பம் ஆயிடுச்சா ..? சேக்காளி ...(:

உண்மைதான்
கோபத்தில் உருகிவிடுவோம்
உருக்கிவிடுவார்கள் (:

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஹா..ஆஹா!!! என்ன ஒரு அழகான கவிதை.. மிகவும் ரசிக்கிறேன்.. சூப்பராக இருக்கு...நீங்க இப்பூடி உருகுவதாலதான், அவிங்களுக்கு அப்பூடிக் கோபம் வருதோ என்னவோ?:)))

முற்றும் அறிந்த அதிரா said...

ரொம்ப முன்னேறிட்டீங்க... அடுத்தடுத்துப் பதிவு போடுறீங்க.. கீப் இட் அப்.. வாழ்த்துக்கள்.

சிவரதி said...

ஆழ்ந்த அன்பினைக்கூட
அன்நொடியில் மழுங்கடிக்க செய்திடும்...
ஆசைகளை அளவாக்கி
அதிகாரத்தை தனதாக்கி
அன்பை நிலையாக்க
அவரவர் உருவாக்கும்
மறுஉருவே கோவத்தின் வேகத்தில்
உருகி வடிந்த உங்கள் கவி வரிகள் அழகு.........