Saturday 10 July, 2010

...ச்சே...


நானா...சிகரெட்டா...
வாதங்களுக்குப் பிறகு -
நாம் சந்தித்துக் கொள்ளும் தனிமையில்
என் இதழ் நிறம் சோதித்து,
விரலிடுக்கை நுகர்ந்து,
சட்டையை பைமறி செய்து,
சிகரெட் துகள் சேகரித்து சினங்கொள்ள...

நண்பனின் திருமணம்,
அலுவலக சந்திப்புகள்,
வார இறுதிக் கொண்டாட்டங்கள்...
கொஞ்சமாய் என்னுள் போதை நிரப்பும் வேளைகளில் -
கலங்கிய கண்களுடன் ஓரிரு வாரங்கள் நீ ஊடல் கொள்ள...

கைகோர்த்து நடக்கையில்
எதிர்வரும் பெண்ணை ஓரப்பார்வை பார்க்கும் போது
கைகளில் காதல் வழிய வழிய
காதைத் திருகி, கன்னம் கிள்ள...

உன் கோபத்திற்கு பயந்து,
உன் ஊடலுக்கு அஞ்சி,
உன் கிள்ளலுக்கு மருகி...

இதுதான் கடைசி.
இனிமேல் தொடமாட்டேன்...
இனிமேல் பருகமாட்டேன்...
இனிமேல் பார்க்கமாட்டேன்...
என்று -
உன்னை கெஞ்சி... கொஞ்சி...

...ச்சே...
என்ன பையன் நான்?
நீ வந்து திருத்த -
எந்த பழக்கமும் இல்லையே என்னிடம்!

பி.கு:
- இது படித்ததில் ரசித்ததும், பிடித்ததும்...


2 comments:

தத்துபித்து said...

...ச்சே...
என்ன பையன் நான்?
இப்படி ஒரு கவிதை எழுதி பீல் பண்றதுக்கு எனக்கு எந்த ஒரு பிகரும் மாட்டலியே...

தொடருங்கள்.. நன்றாக இருக்கிறது.

சிசு said...

நன்றி தத்துபித்து. வருகைக்கும்... கருத்துக்கும்...

தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்...